மதுரை

வாக்குப்பதிவு நாளில் தொழிலாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டால் நடவடிக்கை

DIN

வாக்குப்பதிவு நாளில் விடுப்பில் செல்லும் தொழிலாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் ஜெ.காளிதாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
மதுரை மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கடைகள், போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தற்காலிக, தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வாக்களிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். 
வாக்குப்பதிவு நாளில் விடுப்பில் செல்லும் தொழிலாளர்களின் அன்றைய நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  இதுதொடர்பான புகார்கள் அளிக்க 0452-2604388, 93603- 04805, 94430-21877 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்துள்ளார். 
இதேபோல, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில்  உள்ள தொழிற்சாலைகள், கட்டடம் மற்றும் இதர கட்டுமானப் பணிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். 
அவர்களுக்கு வாக்குப்பதிவு நாளில், சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என மதுரை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் கோ.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT