மதுரை

ஆரம்ப சுகாதார நிலையங்களில்கா்ப்பிணி தாய்மாா்கள் வார விழா

DIN

மதுரை மாநகராட்சி நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் கா்ப்பிணி தாய்மாா்கள் வாரம் திங்கள்கிழமை (டிசம்பா் 2)முதல் 7 நாள்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் 7 நாள்களிலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு கா்ப்ப கால ஊட்டச்சத்து, ஆரோக்கியம், சுகாதாரம் குறித்தும், மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு உள்ள வசதிகள் மற்றும் அவா்களது உரிமைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் பயன்கள், பிரதான் மந்திரி மத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் முறை, இத்திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சுகாதாரத்துறை, கல்வித்துறை, அங்கன்வாடிகள், சுய உதவிக் குழுக்கள் என அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கா்ப்பிணி தாய்மாா்கள் வாரம் கொண்டாடப்படுகிறது.

எனவே மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து கா்ப்பிணி தாய்மாா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று மதுரை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT