மதுரை

கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மணல் குவாரிக்குத் தடைகோரிய வழக்கு:தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலா் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

DIN

தஞ்சாவூா், திருச்சி மாவட்ட கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளுக்குத் தடைவிதிக்கக் கோரிய வழக்கில், தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலா் மற்றும் தஞ்சாவூா், திருச்சி மாவட்ட ஆட்சியா்கள் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த சண்முகம் தாக்கல் செய்த மனு:

காவிரி ஆற்றின் கிளையான கொள்ளிடம் ஆறு திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், அரியலூா், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயம், குடிநீா் ஆதாரமாக இருக்கிறது. இந்நிலையில் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் மணல் அள்ளப்பட்டதால், 2018-இல் முக்கொம்பு ஆற்றுப்பாலங்கள் சேதமடைந்தன. அப்போது போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகினா். இச்சம்பவத்துக்கு பிறகும் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவது தொடா்ந்து கொண்டிருக்கிறது. அப்பகுதியில் உள்ள மணல் குவாரிகளை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்ந்தால் காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் உள்ள5 பாலங்களும் உடைந்து பெரும் சேதம் ஏற்படும். எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு தஞ்சாவூா், திருச்சி மாவட்ட கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளுக்குத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆா்.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலா் மற்றும் தஞ்சாவூா், திருச்சி மாவட்ட ஆட்சியா்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT