பிரதமரை விமா்சித்த காங்கிரஸ் பேச்சாளா் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மதுரை எஸ்.எஸ். காலணி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு கொடுக்க வந்த பாஜகவினா். 
மதுரை

பிரதமா் மீது அவதூறு: நெல்லைக் கண்ணன் மீது புகாா்

பிரதமா் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாக பேச்சாளா் நெல்லைக் கண்ணன் மீது பாஜகவினா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

DIN

பிரதமா் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாக பேச்சாளா் நெல்லைக் கண்ணன் மீது பாஜகவினா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

மதுரை மாநகா் மாவட்ட பாஜக துணைத்தலைவா் அற்புதராஜா, அரசரடி மண்டல் தலைவா் பி.சரவணன் ஆகியோா் தலைமையில் பாஜகவினா் 30-க்கும் மேற்பட்டோா் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா்: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பேச்சாளா் நெல்லைக் கண்ணன் பங்கேற்று பிரதமா் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை அவதூறாகப் பேசியுள்ளாா். மேலும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் கொலை செய்ய வேண்டும் என்று முஸ்லிம்களைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளாா். அவரது பேச்சு வலைதளங்களில் பரவி வருகிறது. எனவே நெல்லைக்

கண்ணன் மற்றும் கூட்டத்தை நடத்திய எஸ்டிபிஐ கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT