மதுரை

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி

DIN

மதுரை மாநகராட்சியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி புதன்கிழமை உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு துணை ஆணையர் ப.குமரேஸ்வரன் தலைமை வகித்தார். இதில், மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்று, இந்திய அரசியலமைப்புச்சட்ட விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் உரிமை என்பதால், 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டோம். குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவோம். தமிழகத்தை குழந்தைத்தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்ற பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதேபோல மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களிலும் உதவி ஆணையர்கள் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT