மதுரை

லாரியில் கொண்டு செல்லப்பட்ட  400 மின்சார குக்கர்கள் பறிமுதல்

மதுரை அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 400 மின்சார குக்கர்களை தேர்தல் அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

DIN

மதுரை அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 400 மின்சார குக்கர்களை தேர்தல் அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
   துணை வட்டாட்சியர் எல்.திருமுருகன் தலைமையிலான  மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி நிலைக் கண்காணிப்புக் குழுவினர் மதுரையை அடுத்த பொய்கைக்கரைப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
 அப்போது, அவ்வழியாக வந்த லாரியைச் சோதனையிட்டதில், அதில் 400 மின்சார குக்கர்கள் இருப்பது தெரியவந்தது. மதுரை கே.கே.நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து அவை கொண்டு செல்லப்படுவதாக ஆவணங்கள் இருந்தன. 
  அதில் அவற்றை வாங்கியவர் முகவரி எஸ்.எஸ்.காலனி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், லாரியில் இருந்தவர்கள் வெவ்வேறு இரு முகவரிக்கு கொண்டு செல்வதாகக் கூறியுள்ளனர். அதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த தேர்தல் அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் யா.ஒத்தக்கடையில் உள்ள மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலக  பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT