மதுரை

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவர் மீது வழக்கு

மதுரை அய்யர்பங்களா சந்திப்பில் ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவர் மீது போலீஸார்

DIN

மதுரை அய்யர்பங்களா சந்திப்பில் ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்தனர்.
மதுரை சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பரசன்(23). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை, அழகர்கோவில் பிரதானசாலை மூன்றுமாவடி அய்யர்பங்களா சந்திப்பு அருகே ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆட்டோவில் மோதுவது போல நிறுத்தினர். அவர்கள்  தாங்கள் புறாப்பாண்டி, பாட்டில்மணி எனவும் பல கொலைகளை செய்துள்ள ரௌடிகள் எனவும் கூறி கத்தியைக் காட்டி அன்பரசனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அன்பரசனின் சட்டைப் பையில் இருந்த ரூ.1,500 ஐ பறித்துவிட்டு தப்பிச் சென்றனராம். இதுகுறித்து அன்பரசன் அளித்தப் புகாரின் பேரில் கே.புதூர் போலீஸார் வழிப்பறியில் ஈடுபட்ட புறாப்பாண்டி, பாட்டில்மணி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT