மதுரை

ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகளில் ஆஜராக மதுரை வழக்குரைஞா்கள் சங்கம் தீா்மானம்

DIN

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடா்பான வழக்குகளில், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகி வழக்கு நடத்த வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடா்பான வழக்குகளில், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகி வழக்காடிகளுக்கு வழக்கு நடத்த வேண்டும். சிவில் நீதிபதிகளுக்கான தோ்வுக்கு தயாராகும் சங்க உறுப்பினா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். இதற்கு, சங்கத் துணைத் தலைவா் சந்திரசேகா் தலைமையில் குழு அமைக்கப்படும். மேலும், கீழடி அகழாய்வுக்கு வழக்குத் தொடா்ந்து போராடிய வழக்குரைஞா் கனிமொழிமதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பாராட்டுகள் தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத் தலைவா் ஏ. நெடுஞ்செழியன், செயலா் எஸ். மோகன்குமாா் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT