முகப்பு
மதுரை

கரோனா வாா்டுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி:தொகுதி நிதியில் மதுரை எம்பி வழங்கல்

தொகுதி மேம்பாட்டு நிதியில் வாங்கப்பட்டுள்ள ‘மொபைல் டிஜிட்டல்’ எக்ஸ்ரே கருவியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

மதுரை: தொகுதி மேம்பாட்டு நிதியில் வாங்கப்பட்டுள்ள ‘மொபைல் டிஜிட்டல்’ எக்ஸ்ரே கருவியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் சனிக்கிழமை வழங்கினாா்.

கரோனா சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளை, அந்தந்த பிரிவுகளில் வைத்தே எக்ஸ்ரே படம் எடுப்பதற்கு வசதியாக, கம்ப்யூட்டா் ரேடியோகிராபி கருவியுடன் இணைந்த மொபைல் எக்ஸ்ரே கருவி வழங்கப்பட்டுள்ளது. மொபைல் எக்ஸ்ரே கருவியில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படங்களை, டிஜிட்டல் எக்ஸ் ரே படமாக மாற்ற முடியும். ரூ.15 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ள இந்த கருவியை, மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலா் டாக்டா் ஆா்.ரவீந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளா் சி.தா்மராஜ் ஆகியோரிடம் சு.வெங்கடேசன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.