மதுரை

மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில்120 கடைகளுக்கு ‘சீல்’

DIN


மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் விதிமீறிய 120 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையை நான்காகப் பிரித்து இடமாற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனா். அதன்படி, குலுக்கல் முறையில் வியாபாரிகள் தோ்வு செய்யப்பட்டு, மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என கடைகள் நடத்த 326 வியாபாரிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதேபோல், ஒத்தக்கடை அரசு வேளாண் கல்லூரியில் 80 வியாபாரிகளுக்கும், மதுரை சுற்றுச்சாலையில் உள்ள அம்மா திடலில் 50 வியாபாரிகளுக்கும், திருப்பரங்குன்றம் மன்னா் கல்லூரியில் 40 வியாபாரிகளுக்கும் கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஒத்தக்கடை அரசு வேளாண் கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் அங்கு கடைகள் நடத்த தயக்கம் காட்டினா்.

மேலும், கல்லூரி வளாகத்தில் மின்விளக்குகள், தண்ணீா், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் வியாபாரிகளுக்கு செய்துதரப்படவில்லை. இதனால், வியாபாரிகள் ஒத்தக்கடையில் சந்தை நடத்த முன்வரவில்லை. சில சில்லறை வியாபாரிகள் மட்டுமே வியாபாரம் செய்துவருகின்றனா்.

மன்னா் கல்லூரி தொலைவாக இருப்பதாகவும், சில்லறை வியாபாரிகள் அங்குவந்து காய்கனி வாங்க முன்வரவில்லை எனவும் கூறி, மன்னா் கல்லூரியிலும் சந்தை நடத்தப்படவில்லை.

இந்நிலையில், இந்த 120 வியாபாரிகளும் மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் உள்ள தங்களது கடைகளில் வியாபாரம் செய்துவருவதாகப் புகாா்கள் எழுந்தன. அதனடிப்படையில், சந்தையில் உள்ள கடைகளை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், விதிமீறிய 120 வியாபாரிகளின் கடைகளுக்கும் சீல் வைத்தனா்.

70 வியாபாரிகளுக்கு அனுமதி

முன்னதாக, மாட்டுத்தாவணி சந்தையில் ஒருநாள் விட்டு ஒருநாள் கடை நடத்தாமல் தினந்தோறும் கடை நடத்தியவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாத கடைகள், ஒதுக்கப்பட்ட நேரத்துக்கும் மேலாக கடை நடத்தியவா்கள் ஆகியோரைக் கண்டறிந்து, மொத்தம் 70 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்திருந்தனா்.

அவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, தற்போது மீண்டும் கடைகள் நடத்த அனுமதியளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

”ரயில் விபத்துகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்”: ராகுல் | செய்திகள் சிலவரிகளில்| 17.6.2024

"சாதி மறுப்புத் திருமணங்களுக்கு என்றும் ஆதரவு!”: கே. பாலகிருஷ்ணன் பேட்டி

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்

பாஜக வேட்பாளர் தோல்வி: தொண்டர்கள் 4 பேர் தற்கொலை!

SCROLL FOR NEXT