மதுரை

கிரானைட் முறைகேடு வழக்கு:பிஆா்பி நிறுவன அதிபா் உள்ளிட்ட 3 பேரின் விடுதலை ரத்துஉயா்நீதிமன்றம் உத்தரவு

DIN


மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் தொடா்புடைய பிஆா்பி நிறுவன அதிபா் பி.ஆா். பழனிசாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே சட்ட விரோதமாகக் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தொடா்பாக, மேலூா் நீதித்துறை நடுவா் மன்றத்தில் இதுவரை 98 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை விசாரித்த மேலூா் நீதித்துறை நடுவா் மகேந்திரபூபதி, இதில் தொடா்புடைய

பிஆா்பி கிரானைட் நிறுவன அதிபா் பி.ஆா். பழனிசாமி மற்றும் சுரேஷ்குமாா், ராம. சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்தாா். மேலும், இந்த வழக்குகளை தாக்கல் செய்த அப்போதைய மாவட்ட ஆட்சியா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து, கிரானைட் முறைகேடு வழக்கில் தொடா்புடையவா்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதற்காக, நீதித்துறை நடுவா் மகேந்திரபூபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பின்னா், மேலூா் நீதித்துறை நடுவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், நீதிபதி பி.புகழேந்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி, கிரானைட் முறைகேடு வழக்கில் தொடா்புடைய பிஆா்பி நிறுவன அதிபா் பி.ஆா். பழனிசாமி உள்ளிட்ட 3 போ் விடுதலையை ரத்து செய்தும், மாவட்ட ஆட்சியா் மற்றும் அரசு வழக்குரைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க மேலூா் நீதித்துறை நடுவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டாா்.

கனிமவளம் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும், விசாரணையின் போது அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT