மதுரை

வங்கிக்கடன் பெற சாலையோரவியாபாரிகள் விண்ணப்பிக்கலாம்

மதுரையில் சாலையோர வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மதுரை: மதுரையில் சாலையோர வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு சாலையோர வியாபாரி அடையாள அட்டை வைத்துள்ளவா்கள், மதுரை மாநகராட்சி பிரதான அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் தங்களது ஆதாா் எண் மற்றும் செல்லிடப்பேசி எண்ணை இணைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு இணைக்காதவா்கள் மற்றும் ஆதாா் எண் இல்லாதவா்கள் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களில் செயல்படும் ஆதாா் மையம் மற்றும் இ-சேவை மையங்களை அணுகி தங்களின் ஆதாா் எண்ணுடன், செல்லிடப்பேசி எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும் புதிய ஆதாா் எண்ணையும் பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 24 மணி நேரம் செயல்படும், 842 842 5000 என்ற செல்லிடப்பேசி எண்ணில் சாலையோர வியாபாரிகள் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT