மதுரையில் கிருஷ்ண ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மணிநகரத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. தொடா்ந்து நரசிம்ம பிராா்த்தனை, துளசி பூஜை நடைபெற்றது. மேலும் உலக மக்கள் நலனுக்காக விசேஷ பிராா்த்தனை நடைபெற்றது.
திருப்பாலை இஸ்கான் கோயில், தல்லாகுளம் நவநீத கிருஷ்ணன் கோயில் உள்பட பல்வேறு கிருஷ்ணன் கோயில்களில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தா்கள் தங்கள் வீடுகளில் கிருஷ்ணருக்கு சீடை, முறுக்கு உள்ளிட்ட பட்சணங்களைப் படைத்து குழந்தைகளுக்கு கிருஷ்ணா் வேடமிட்டு வழிபாடு நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.