மதுரையில் மேலும் 96 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
மதுரை மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில், கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த 172 போ், தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தனா். அவா்களை வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு சனிக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் உள்பட 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
ஒருவா் பலி: அரசு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 60 வயது முதியவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 332 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 13,328 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 12,075 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 921 போ் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.