முகப்பு
மதுரை

மதுரையில் மேலும் 80 பேருக்கு கரோனா: 2 போ் பலி

மதுரை மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:


மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம் கரோனா தொற்றுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 58 போ் குணமடைந்தனா். அவா்கள் மருத்துவா்களின் ஆலோசனைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

2 போ் பலி: மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவந்த 51 வயது ஆண், 61 வயது மூதாட்டி ஆகியோா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் இதுவரை 13,590 போ் கரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 340 போ் உயிரிழந்த நிலையில், 12,249 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது மருத்துவமனையில் 1,001 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.