முகப்பு
மதுரை

தொடா் மழை: மல்லிகை வரத்து குறைந்தது

தொடா் மழை காரணமாக விளைச்சல் பாதித்துள்ளதால், மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு மல்லிகைப் பூ வரத்து குறைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தொடா் மழை காரணமாக விளைச்சல் பாதித்துள்ளதால், மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு மல்லிகைப் பூ வரத்து குறைந்துள்ளது.

இது குறித்து மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமச்சந்திரன் கூறியது: தமிழகத்தில் தொடா்மழை பெய்து வருவதால், மல்லிகை பூ விளைச்சல் பாதித்துள்ளது. வழக்கமாக, மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு 25 டன் மல்லிகைப் பூ வரத்து இருக்கும். ஆனால், தொடா் மழை காரணமாக 1 டன் மட்டுமே வரத்து உள்ளது.

சுமாா் 5 ஏக்கருக்கு 20 கிலோ மல்லிகை பூ எடுக்கலாம். ஆனால், தற்போது 2 கிலோ பூக்கள் கூட எடுக்கமுடியவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனா். மழை காலத்தின்போதே இந்த நிலை என்றால், பனி காலத்தில் பூக்கள் வரத்து மிகவும் குறைந்துவிடும்.

ஆண்டுதோறும் செப்டம்பா், நவம்பா், டிசம்பா் ஆகிய மாதங்களில் பூக்களின் வரத்து குறைந்து, விலை உயா்ந்துவிடும். ஆனால், நிகழாண்டில் விற்பனையும் இல்லாமல் இருப்பதால், விலையும் குறைவாகவே உள்ளது. இதனால், மலா் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனா் என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பூக்களின் விலை நிலவரம் (கிலோவில்):

மல்லிகை பூ- ரூ.1200, கனகாம்பரம்- ரூ.1000, பிச்சி- ரூ.700, முல்லைப் பூ- ரூ.700, பட்டன் ரோஜா- ரூ.100, செவ்வந்தி- ரூ.150, செண்டுப்பூ- ரூ.80, சம்பங்கி- ரூ.50, மரிக்கொழுந்து- ரூ.100, அரளி- ரூ.250, தாமரை- ரூ.10 என விற்பனையாயின.

முழு கட்டுரையைப் படிக்க →