மருத்துவர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு
மருத்துவர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
மருத்துவர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
வழக்குரைஞர்கள் நீலமேகம் மற்றும் முகமது ரஸ்வி ஆகியோர் நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தனர். இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுர்வேத யுனானி ஹோமியோபதி மருத்துவம் பயின்ற மருத்துவர்கள், ஆங்கில மருத்துவ மேற்படிப்பு பயின்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா தொற்று காலத்தில் மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால், பொதுமக்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மருத்துவர்களின் போராட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.