உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து-ஷேர் ஆட்டோ மோதல்: 2 பேர் பலி
உசிலம்பட்டியை அடுத்த புளியம்பட்டிகிராமத்தில் தனியார் பேருந்து ,ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உசிலம்பட்டியை அடுத்த புளியம்பட்டிகிராமத்தில் தனியார் பேருந்து ,ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரையிலிருந்து தேனி மாவட்டம் போடிக்கு தனியார் பேருந்து வெள்ளிக்கிழமை சென்றது. செக்கானூரணி புளியம்பட்டி அருகே பேருந்து சென்றபோது முன்னால் சென்ற லாரி திடீரென வேகத்தை குறைத்துள்ளது.
இதில் நிலை தவறிய தனியார் பேருந்து ஓட்டுனர் பக்கவாட்டில் திருப்பினார். அப்போது அருகில் சென்ற ஷேர் ஆட்டோ மீது பேருந்து மோதியது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த முருகன் என்பவரின் மனைவி சுமதி(62), கருமாத்தூர் பூச்சம்பட்டியைச் சேர்ந்த பாண்டி(62)ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த மீனாட்சிபட்டியைச் சேர்ந்த காசி, புளியம்பட்டியைச் சேர்ந்த நல்லம்மாள் ஆகிய இருவரும் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து செக்கானூரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுனர் உசிலம்பட்டியைச் சேர்ந்த பழனிசெல்வத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.