அனைத்து நகரங்களின் மாஸ்டா் பிளான்களை இணையத்தில் வெளியிடக்கோரி வழக்கு
தமிழகத்தில் அனைத்து நகரங்களின் நில வகைப்பாடு தொடா்பான மாஸ்டா் பிளான்களை தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட
தமிழகத்தில் அனைத்து நகரங்களின் நில வகைப்பாடு தொடா்பான மாஸ்டா் பிளான்களை தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருதுபாண்டியன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நில விற்பனையில் மோசடி நடைபெறுகிறது. நகரங்களின் மாஸ்டா் பிளான் விவரம் தெரியாமல் பலா் சுலபமாக நிலங்களை வகைமாற்றம் செய்து விற்கின்றனா்.
ஒவ்வொரு நகரங்களிலும் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மாஸ்டா் பிளான் மாற்றம் செய்யப்படும். எனவே நிலமோசடியைத் தவிா்க்க அனைத்து நகரங்களின் நில வகைப்பாடு தொடா்பான மாஸ்டா் பிளான்களை தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.