முகப்பு
மதுரை

மதுரையில் 566 பயனாளிகளுக்கு ரூ.76.90 லட்சம் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த 566 பயனாளிகளுக்கு ரூ.76.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குகிறாா் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ
பகிர்:

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த 566 பயனாளிகளுக்கு ரூ.76.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கினாா்.

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 566 நபா்களுக்கு ரூ.76.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

இவ்விழாவில் அவா் பேசியது: அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறக் கூடிய வகையில் அதிமுக அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 31 லட்சம் போ் முதியோா் ஓய்வூதியம் பெறுகின்றனா். புதிதாக 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விலையில்லா மடிக்கணினி, விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா்.

மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன், மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரஜினி வருகையால் பாதிப்பில்லை:

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறியது: தமிழகத்தில் தற்போது முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அலை தான் வீசுகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாா். நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் தமிழகத்தில் எந்த புதுமையும் நடைபெறப் போவதில்லை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →