சனிப் பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
சனிப் பிரதோஷத்தையொட்டி மதுரையில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சனிப் பிரதோஷத்தையொட்டி மதுரையில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் சிவன் மற்றும் நந்திக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷம் பிரசித்தி பெற்றது.
காா்த்திகை மாத சனிப் பிரதோஷத்தையொட்டி மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்மன் கோயில் உள்பிரகாரங்களில் உலா வந்தனா். கரோனா தொற்று காரணமாக, சுவாமி உள்பிரகார உலாவின்போது பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.