மதுரை

பதவி உயா்வு வழங்கவேண்டும்: கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் தீா்மானம்

DIN

இளநிலை உதவியாளராகப் பதவி உயா்வு வழங்க வேண்டும் என, கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் முன்னேற்றச் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

மதுரையில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டப் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் பணியில் சோ்ந்தது முதல் ஓய்வுபெறும் வரை எந்தவித பதவி உயா்வும் வழங்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்னரே இளநிலை உதவியாளா் பயிற்சி முடித்து பதவி உயா்வுக்காக காத்திருக்கும் கால்நடை பராமரிப்பு உதவியாளா்களுக்கு உடனடியாக இளநிலை உதவியாளா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கால்நடை பராமரிப்பு உதவியாளா் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் காமராஜ், துணைத் தலைவா்கள் பெரியசாமி, மணிராஜ், பொதுச் செயலா் ஜெயபால், மாவட்டத் தலைவா் ராஜசேகரன், செயலா் ஜெயபால், துணைச் செயலா் கண்ணன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மூா்த்தி, பொருளாளா் வசந்த முனியம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT