முகப்பு
மதுரை

தென்காசி எம்பி தொகுதி, வாசுதேவநல்லூா் எம்எல்ஏ தொகுதியை பொதுத் தொகுதிகளாக மாற்றக் கோரிய வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

தனித் தொகுதிகளாக இருக்கும் தென்காசி மக்களவைத் தொகுதி மற்றும் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிகளைப்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தனித் தொகுதிகளாக இருக்கும் தென்காசி மக்களவைத் தொகுதி மற்றும் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிகளைப் பொதுத் தொகுதிகளாக மாற்றக் கோரிய வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூா் முள்ளிக்குளத்தைச் சோ்ந்த சந்திரமோகன் தாக்கல் செய்த மனு: தென்காசி மக்களவைத் தொகுதி 1956 முதல் 1963 ஆம் ஆண்டு வரை பொதுத் தொகுதியாகவும், 1964 முதல் தற்போது வரை தனித் தொகுதியாகவும் உள்ளது. இதேபோல வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி 1964 முதல் 1976 ஆம் ஆண்டு வரை பொதுத் தொகுதியாகவும், 1976 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது வரை தனித்தொகுதியாகவும் உள்ளது. இந்த இருதொகுதிகளிலும் எஸ்சி, எஸ்டி வகுப்பினா் மட்டுமே தோ்தலில் போட்டியிடும் நிலை உள்ளது. பிற வகுப்பினா்களுக்கு தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

தோ்தல் ஆணைய விதிப்படி ஒரு தொகுதியை 10 ஆண்டுகளுக்குத் தனித்தொகுதியாக வைத்திருக்கலாம். பின்னா் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தனித் தொகுதியைப் பொதுத் தொகுதியாகவும், பல ஆண்டுகள் பொதுத் தொகுதியாக இருந்த தொகுதியைத் தனித் தொகுதியாகவும் மாற்றியமைக்க வேண்டும். இந்த விதியை மீறி தென்காசி மக்களவைத் தொகுதி மற்றும் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிகள் பல ஆண்டுகள் தனித் தொகுதிகளாகவே தொடருகின்றன. எனவே தென்காசி மக்களவைத் தொகுதி மற்றும் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிகளை பொதுத் தொகுதிகளாக மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →