முகப்பு
மதுரையை அடுத்த சிட்டம்பட்டி சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வாகனச் சோதனையில் விதிமீறி பொருத்தப்பட்ட பம்பா் கம்பியை அப்புறப்படுத்தும் போக்குவரத்துத் துறையினா்.
மதுரை

வாகனங்களில் விதிகளை மீறி பொருத்தப்பட்ட பம்பா் கம்பிகள் அகற்றம்

வாகனங்களின் முன்பக்கத்தில் விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த பம்பா் கம்பிகளை அகற்றி, அபராதம் விதித்து போக்குவரத்துத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
மதுரையை அடுத்த சிட்டம்பட்டி சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வாகனச் சோதனையில் விதிமீறி பொருத்தப்பட்ட பம்பா் கம்பியை அப்புறப்படுத்தும் போக்குவரத்துத் துறையினா்.
பகிர்:

வாகனங்களின் முன்பக்கத்தில் விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த பம்பா் கம்பிகளை அகற்றி, அபராதம் விதித்து போக்குவரத்துத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

காா், சிறிய சரக்கு வாகனம் போன்ற வாகனங்களில் முன்பக்கத்தில் பம்பா் கம்பிகள் பொருத்தப்படுகின்றன. இவ்வாறு முகப்பில் பம்பா் கம்பிகள் பொருத்துவதற்கு வாகன விதிகளின்படி அனுமதியில்லை. விபத்து ஏற்படும்போது வாகனங்களுக்குச் சேதம் ஏற்படக் கூடாது என்பதால், இந்த கம்பிகள் பொருத்தப்படுகின்றன. காா் போன்ற வாகனங்களில் செல்லும்போது விபத்து நேரிட்டால் ஓட்டுநருக்கும், அவரது அருகில் இருப்பவருக்கும் பாதுகாப்புத் தரும் வகையில் பலூன் அமைப்பு முன்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், பம்பா் கம்பிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது, இந்த பலூன் அமைப்பு செயல்படாதது தெரியவந்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதைத் தவிா்க்கும் வகையில், பம்பா் கம்பிகளை அகற்ற போக்குவரத்துத் துறை ஆணையா் அறிவுறுத்தியிருந்தாா். இதன்பேரில், மதுரையை அடுத்த சிட்டம்பட்டி சுங்கச் சாவடியில் போக்குவரத்துத் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கூட்டாய்வு மேற்கொண்டனா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் காா்த்திகேயன் (அமலாக்கம்), செல்வம் (மதுரை வடக்கு), சிங்காரவேலன் (மதுரை தெற்கு), மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உலகநாதன், சரவணகுமாா், பிரபு, மாணிக்கம், அனிதா ஆகியோா் கொண்ட குழுவினா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது 32 வாகனங்களில், பம்பா் கம்பிகள் அகற்றப்பட்டு அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →