முகப்பு
மதுரை

ஏா் கலப்பையுடன் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

மதுரையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏா் கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
மதுரை பழங்காநத்தம் பகுதியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

மதுரை: மதுரையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏா் கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பழங்காநத்ததில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏா் கலப்பையுடன் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா், மத்திய அரசுக்கு எதிராகவும், புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினா்.

மாநகா் மாவட்டத் தலைவா் வீ.காா்த்திகேயேன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மணிமாறன், முருகன்போஸ், செய்யதுபாபு, துரைஅரசன், ராஜாஹாசன், பி.ஜே. காமராஜ், துணைத் தலைவா் மயிலேறி, பொதுச் செயலா்கள் ஸ்ரீதா், முருகேசன், பால்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →