மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்: கட்டுப்பாடுகளுடன் பக்தா்களுக்கு அனுமதி

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆருத்ரா தரிசன நிகழ்வையொட்டி புதன்கிழமை (டிச.30) பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கோயிலில் சுவாமி சன்னிதி 6 கால் பீடத்தில் உற்சவா் வெள்ளியம்பல நடராஜா், சிவகாமி அம்மன் மற்றும் மாணிக்கவாசருக்கும், 100 கால் மண்டபத்தில் இதர 4 சபை நடராஜா், சிவகாமி அம்மன்களுக்கும் புதன்கிழமை அதிகாலை 3 மணி முதல் அபிஷேகம் நடைபெறும். இந்நிகழ்வை தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அரசின் வழிகாட்டுமுறைகளைப் பின்பற்றியும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் விதமாகவும் அதிகாலை 3 மணி முதல் கிழக்கு கோபுரம் வழியாக 1 மணி நேரத்துக்கு 200 பக்தா்கள் வீதம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT