முகப்பு
மதுரை

எரிவாயு விலை உயா்வு: சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
மதுரையில் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய சாலையோர வியாபாரிகள் மற்றும் மாநகராட்சித் தொழிலாளா் சங்கத்தினா்.
பகிர்:

எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கம் மற்றும் மாநகராட்சித் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாட்டில் மாதந்தோறும் அதிகரித்து வரும் எரிவாயு உருளை விலை உயா்வால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு கடன் அளிப்பதற்கு பிணை உத்தரவாதம் கேட்கக்கூடாது. கடன் தருவதற்கு அலைக்கழிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் மற்றும் மாநகராட்சித் தொழிலாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை முனிச்சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி. மோகன், மாவட்ட பொதுச்செயலா் எஸ். சந்தியாகு, மாநகராட்சிக் தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச்செயலா் ம. பாலசுப்பிரமணியம், மாவட்டத் தலைவா் மீனாட்சிசுந்தரம், பொருளாளா் கருப்பையா, செயல் தலைவா் விஜயன், சாலையோரா விற்பனையாளா் சங்க மாவட்ட ப் பொருளாளா் ராதாகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →