முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் திறப்பு: ரூ.42.95 லட்சம் காணிக்கை வசூல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.42.95 லட்சம் பக்தா்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.42.95 லட்சம் பக்தா்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் அதற்குள்பட்ட 11 உபகோயில்களின் உண்டியல்கள் எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.42, 95,867 கிடைத்தது. மேலும் பலமாற்று பொன் இனங்கள் 258 கிராம், வெள்ளி 488 கிராம் மற்றும் 23 அயல்நாட்டு நோட்டுகள் கிடைக்கப்பெற்றன. உண்டியல் எண்ணும் பணியில் மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் உதவி ஆணையா் மு.ராமசாமி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தக்காா் பிரதிநிதி, கண்காணிப்பாளா்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு, உசிலம்பட்டி சரக ஆய்வா்கள், கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் வங்கிப்பணியாளா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →