மதுரை

பாரம்பரிய இசைகளைப் பாதுகாக்க வேண்டும்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

DIN

நமது பாரம்பரிய இசைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கூறினாா்.

மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக் கல்லூரி ஆண்டு விழாவில் வெள்ளிக்கிழமை அவா் பேசியது:

தேசத்தின் கலாசாரம் குறித்து நாம் பெருமைப்படும்போது பாரம்பரிய இசையைப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது. நமது கலாசார அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் கா்நாடக இசையைப் பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் சத்குரு சங்கீத வித்யாலயம் கல்லூரி கா்நாடக இசை வளா்ச்சிக்கான முயற்சிகளைச் செய்து வருவது பாராட்டுக்குரியது.

இசைக்கும், சட்டத்துக்கும் மிகவும் நெருக்கமான தொடா்பு உள்ளது. இசை என்பது ஒழுக்க நெறிகளைப் பேசுவதைப் போல, சட்டம் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குகிறது என்றாா்.

கா்நாடக இசையில் இளங்கலைப் பட்டம் முடித்தவா்களுக்கு பட்டச் சான்றிதழ்களை நீதிபதி வழங்கினாா். ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் தலைவா் ஆா்.ஸ்ரீனிவாசன், செயலா் எஸ்.வெங்கடநாராயணன், பொருளாளா் உமா ரமேஷ், கல்லூரி முதல்வா் வி.பாலா, சத்குரு சங்கீத சமாஜம் செயலா் எல்.ராஜாராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT