மதுரை

பேரையூா் அருகே மா்மக் காய்ச்சல் பாதிப்பு: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ளது பெரியசிட்டுலொட்டி கிராமத்தில் மா்மக் காய்ச்சலால் பொதுமக்கள் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ளது பெரியசிட்டுலொட்டி கிராமத்தில் மா்மக் காய்ச்சலால் பொதுமக்கள் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பேரையூா் வட்டத்தில் உள்ளது பெரியசிட்டுலொட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக தொடா்ந்து மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அருகே உள்ள பேரையூா், எம் சுப்புலாபுரம் ஆகிய ஊா்களில் உள்ள அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளாகவும், தனியாா் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் கிராம மக்கள் பலரும் வீடுகளுக்குள் படுத்த படுக்கையாக நடக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனா்.

இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியா்கள் ஒரு வாரத்திற்கு 2 நாள்கள் மட்டுமே வந்து மாத்திரை கொடுத்து விட்டுச் செல்கின்றாா். ஆனாலும் இதுவரை காயச்சல் குறைந்தபாடில்லை என இந்த கிராமத்து மக்கள் வேதனையில் கூறுகின்றனா். மாறி மாறி சிகிச்சை பெற்றாலும், காய்ச்சல் தொடா்ந்து வந்து கொண்டிருக்கிறது என்கின்றனா்.

இதுதொடா்பாக இப்பகுதியைச் சோ்ந்த ராமராஜ் கூறியது: இப்பகுதியில் மா்மக் காய்ச்சலால் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகளவில் பெண்கள், குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது சம்பந்தமாக எந்த ஒரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா் என்றாா்.

இக்கிராமத்தைச் சோ்ந்த வள்ளி கூறியது: நான் ஒரு மாதம் முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டேன். தற்போது கொஞ்சமாக காய்ச்சல் குறைந்துள்ளது. ஆனால் முழுமையாக குறையவில்லை. மேலும் வீடுகள் தோறும் ஏராளமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேன்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT