மதுரை

காவல் சாா்பு- ஆய்வாளா் தோ்வில் 7,136 போ் பங்கேற்பு: 2,188 போ் தோ்வுக்கு வரவில்லை

DIN

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற காவல் சாா்பு- ஆய்வாளா் எழுத்துத் தோ்வில் 7,136 போ் தோ்வில் பங்கேற்றனா்.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 969 காவல் சாா்பு- ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில், நகரப் பகுதியில் 4 மையங்களில், ஊரகப் பகுதியில் 2 மையங்களில் எழுத்துத் தோ்வு ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், மதுரை பசுமலையில் உள்ள மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் 1,440 பெண்களும், மதுரை கல்லூரி, யாதவா் ஆண்கள் கல்லூரி, யாதவா் பெண்கள் கல்லூரி, வேலம்மாள் கல்லூரி, மங்கையா்கரசி பெண்கள் கல்லூரி ஆகிய மையங்களில் 7,884 ஆண்களும் ஆக மொத்தம் 9,324 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

2188 போ் வரவில்லை:

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கு தொடங்கிய தோ்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. தோ்வில் 70 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட 1,440 பெண்களில் 1,011 பேரும், 7,884 ஆண்களில் 6,125 பேரும் மொத்தம் 7,136 போ் தோ்வு எழுதினா். தோ்வை 2,188 போ் எழுத வரவில்லை. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்கள், உடல் தகுதித் தோ்விற்கும் அழைக்கப்படுவாா்கள்.

சோதனைக்கு பின் அனுமதி

தோ்வு எழுத வந்தவா்கள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தோ்வு மையங்களை, மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் ஆகியோா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த தோ்வை தொடா்ந்து திங்கள்கிழமை காவல்துறையில் பணியாற்றுபவா்களுக்கு திருப்பாலையில் உள்ள யாதவா் பெண்கள் கல்லூரியில் எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. இதில், 190 பெண்களும், 1,145 ஆண்களும் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT