மதுரை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வேறு தேதியில் நடத்தகோரி ஆட்சியரிடம் மனு

DIN

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதால், ஜல்லிக்கட்டு விழாவை வேறு தேதிக்கு மாற்றுமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது.

தென்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.கண்ணன், மதுரை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜசேகரிடம், செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையின்படி, அனைத்து சமூகத்தினரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இம்மனு புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதால் அன்றைய தினம் நடத்த உள்ள ஜல்லிக்கட்டு விழாவை வேறு ஒரு தேதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT