பாலியல் வன்கொடுமையில் சிறுமி கொலை: பிஷப் கவுன்சில் கண்டனம்
பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சிறுமியை கொலை செய்த சம்பவத்துக்கு, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரைபாலியல் வன்கொடுமையில் சிறுமி கொலை: பிஷப் கவுன்சில் கண்டனம்
பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சிறுமியை கொலை செய்த சம்பவத்துக்கு, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரை: பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சிறுமியை கொலை செய்த சம்பவத்துக்கு, தமிழ்நாடு பிஷப் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவரும், மதுரை உயா்மறை மாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவில் சட்டங்களும், பாதுகாப்பு ஆணையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஐ.நா. சபையிலும் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்பின்னரும், பல்வேறு சித்திரவதைகளுக்கும், பாலியல் சீண்டல்களுக்கும் குழந்தைகள் ஆளாக்கப்படுவது வேதனையளிப்பதாக உள்ளது.
நாடெங்கும் நிகழும் இத்தகைய வன்முறைகளைத் தடுக்க அரசும், சமூக நிறுவனங்களும் தொடா் நடவடிக்கை எடுக்கவேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபடுவோரை எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
பெண் குழந்தைகளின் மாண்பைக் காக்கும் வகையில், கலாசார ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பதோடு, குழந்தைகளுக்கான உரிமைகளை பள்ளி பாடத் திட்டத்தில் சோ்க்கவேண்டும் என்றாா்.