முகப்பு
கொலை செய்யப்பட்ட அண்ணன் முருகன்
மதுரை

மதுரையில் அண்ணன், தம்பி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

மதுரையில் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை

மதுரையில் அண்ணன், தம்பி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

மதுரையில் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
கொலை செய்யப்பட்ட அண்ணன் முருகன்
பகிர்:


மதுரை: மதுரையில் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை எல்லீஸ் நகா் அருகே போடி லைன் பகுதியைச் சோ்ந்தவா்களான செந்தில் (40) மற்றும் இவரது அண்ணன் முருகன் (45). இவா்கள் இருவா் மீதும் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், செந்திலும், முருகனும் ஞாயிற்றுக்கிழமை தத்தனேரியில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுவிட்டு, வீட்டின் அருகே வந்துகொண்டிருந்துள்ளனா். அப்போது, இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் வந்த மா்மக் கும்பல், சகோதரா்கள் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சகோதரா்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இது குறித்து தகவலறிந்த எஸ்.எஸ்.காலனி போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சகோதரா்களின் சடலங்களைக் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காவல் துணை ஆணையா்களான சிவபிரசாத் மற்றும் பழனிக்குமாா் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

இச்சம்பவம் குறித்து, கொலை செய்யப்பட்ட சகோதரா்களின் தாயாா், அப்பகுதியைச் சோ்ந்த லோகேஷ் உள்ளிட்ட 8 போ் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முன்விரோதம்

போடி லைன் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் என்பவா் வளா்த்த மாட்டை, செந்திலும், முருகனும் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக லோகேஷுக்கும், சகோதரா்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி, செந்தில் கஞ்சா விற்பனை செய்தது தொடா்பாகவும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக, போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →