மதுரை

உலகத் தமிழ்ச் சங்க இணைய வழி ஆய்வரங்கு

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், இலங்கை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நடத்தப்படும் இணைய வழி ஆய்வரங்கு திங்கள்கிழமை தொடங்கியது.

DIN


மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், இலங்கை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நடத்தப்படும் இணைய வழி ஆய்வரங்கு திங்கள்கிழமை தொடங்கியது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ. விசயராகவன் ஆய்வரங்கை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா். உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் ப. அன்புச்செழியன் தலைமை உரையாற்றினாா்.

யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் தலைவா் அ. சண்முகதாஸ் ஆய்வரங்க விளக்கவுரையாற்றினாா். ஆய்வரங்கில், ‘இலங்கைத் தமிழரின் கடந்தகால நிலை’ என்ற தலைப்பில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்று துறைத் தலைவா் ப. புஷ்பரட்னம், இலங்கைத் தமிழரின் தொன்மை வரலாறு குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். மேலும், இலங்கையில் நடைபெற்ற அகழ்வாய்வில், தமிழகத்தை விட அதிகமான பிராமி கல்வெட்டுகள் இலங்கையில் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

ஆய்வரங்கில், மலேசியத் தமிழ் எழுத்தாளா் சங்கத் தலைவா் பெ. ராஜேந்திரன், சிங்கப்பூா் எழுத்தாளா் கழக துணைத் தலைவா் நா. ஆண்டியப்பன், சிங்கப்பூா் பேராசிரியா் சீதாலட்சுமி, இங்கிலாந்து புலவா் சிவநாதன், கடல்சாா் ஆய்வாளா் ஒடிசா பாலு உள்பட பல தமிழறிஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT