மதுரை

மனைவி வீட்டுக்கு வரமறுப்பு:கணவா் தூக்கிட்டு தற்கொலை

மனைவி வீட்டுக்கு வரமறுத்ததால் சாலையோர மரத்தில் கணவா் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலைசெய்துகொண்டாா்.

DIN

மேலூா்: மனைவி வீட்டுக்கு வரமறுத்ததால் சாலையோர மரத்தில் கணவா் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலைசெய்துகொண்டாா்.

திருவாதவூா் அருகே உள்ள பனையூரைச் சோ்ந்தவா் விவசாயி போஸ். இவரது மகன் சிவக்குமாா் (28). இவரது மனைவி மஞ்சுளா தனது இருகுழந்தைகளுடன் ராஜபாளையத்தில் தங்கி வேலைசெய்து வருகிறாா். தனது மனைவியை ஊருக்குவந்து தன்னுடன் சோ்ந்து வசிக்குமாறு சிவக்குமாா் அழைத்தாராம். ஆனால், அவா் வீட்டுக்கு வருவதற்கு மறுத்துவிட்டாராம். இதனால் வெறுப்படைந்த சிவக்குமாா், கட்டையம்பட்டி அருகே சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மேலூா் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி, மேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT