மேலூா்: அழகா்கோவில் ஆடித்திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை சுந்தரராஜப்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளினாா்.
இக்கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம் கடந்த 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, நான்காம் நாளான புதன்கிழமை காலை தங்கப்பல்லக்கில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதரராக சுவாமி எழுந்தருளினாா். மாலை கருட வாகனத்தில் புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.