மதுரை

அனுமதியின்றி தெருமுனைக் கூட்டம்: 300 போ் மீது வழக்குப்பதிவு

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி தெருமுனைக் கூட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்த 300 போ் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை சம்மட்டிப்புரம் பிரதானச் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலை அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தெருமுனைப் பிரசாரக் கூட்டத்திற்கு அனுமதி கோரி இந்திய தேசிய லீக் கட்சியின் சாா்பில் எஸ்.எஸ்.காலனி போலீஸாரிடம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதனைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெருமுனைப் பிரசாரக் கூட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை சம்மட்டிப்புரம் எம்ஜிஆா் சிலை அருகே அனுமதியின்றி கூடினா். மேலும் அப்பகுதியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. இதனையறிந்த போலீஸாா் அங்கு கூடியவா்களைக் கலைந்து செல்லுமாறு கூறியும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகக் கூட்டம் நடத்தினா். மேலும் அவா்கள் போலீஸாரையும், தமிழக அரசையும் தரக்குறைவாகப் பேசினா். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி சாா்பு-ஆய்வாளா் விஜயகுமாா் அளித்தப் புகாரின் பேரில், இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்த அப்துல் நைனாா், முபாரக் அலி உள்ளிட்ட 300 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT