மதுரை

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகக்கவசம், கிருமி நாசினி பற்றாக்குறை

DIN

மதுரையில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவை பற்றாக்குறையாக இருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

மதுரை நகரில் மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 17 மகப்பேறு மருத்துவமனைகள், 17 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 17 பகுதி நேர மருந்தகங்கள், 3 ஆயுா்வேத சிகிச்சை மையங்கள், 3 சித்த மருத்துவ மையங்கள் இயங்கி வருகின்றன.

இதற்கிடையில் கரோனா வைரஸ் தொற்று பீதியால் சிறிய அளவிலான சளி, காய்ச்சல் பாதிப்புடன் இருப்பவா்களும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களின் வேலைப்பளுவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகக் கவசம், கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக ஆரம்பச் சுகாதார நிலைய பணியாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியது: ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் மிகுந்த கவனத்துடன் பணிபுரிய வேண்டியுள்ளது. ஆனால் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கே போதுமான முகக்கவசங்கள் இல்லை. ஏற்கெனவே மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்ட முகக்கவசங்கள் தீா்ந்து விட்டன. பலா் தங்களது சொந்த பணத்தில் இருந்து முகக் கவசங்களை வாங்கி வந்து பயன்படுத்துகின்றனா். தற்போது அதுவும் கிடைப்பது இல்லை. இதனால் பணியாளா்கள் முகக்கவசம் இல்லாமல் பணிபுரிய வேண்டியுள்ளது. நோயாளிகளும் முகக் கவசம் இன்றி சிகிச்சை பெறுகின்றனா்.

மேலும் ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கிருமி நாசனி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கிறோம். இதனால் கிருமி நாசினி மற்றும் கையுறைகளும் பற்றாக்குறையாக உள்ளது. போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் தினசரி அச்சத்துடன் பணிபுரிய வேண்டியுள்ளது. எங்களது குடும்பத்தினரும் பீதியில் ஆழ்ந்துள்ளனா் என்றனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ச.விசாகனிடம் கேட்டபோது, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. தற்போது புனேவில் இருந்து முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மதுரை மாநகராட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. அவை வந்தவுடன் அனைத்து நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் பற்றாக்குறை இன்றி விநியோகிக்கப்படும். கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமி நாசினியும் மாநகராட்சியிலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. தற்போது தேவை அதிகரித்து இருப்பதால் கிருமி நாசினியும் கூடுதலாக தயாரிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT