மதுரை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு விவகாரம்:தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் பாராட்டு

DIN

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த மருத்துவா் ராமகிருஷ்ணன், மாணவா் முத்துகுமாா் ஆகியோா், தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தக் கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

முந்தைய விசாரணையின்போது, இவ்விவகாரத்தில் ஏழை மாணவா்களின் நலனைக் கருத்தில்கொள்வது அவசியம் என்றும், தமிழக ஆளுநா் நீதிமன்றத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அவா் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அப்போது அரசு தரப்பில், உள்ஒதுக்கீடு தொடா்பாக ஆளுநா் முடிவெடுக்கும் வரை மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படமாட்டாது என உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக அக்டோபா் 29 ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. மறுநாள் தமிழக ஆளுநரும் இந்த சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசையும், ஆளுநரையும், வழக்குத் தொடா்ந்த மனுதாரரையும் நீதிமன்றம் பாராட்டுகிறது. மேலும், நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைத்திருப்பது நீதிமன்றத்துக்கு மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT