முகப்பு
மதுரை

வீரமாமுனிவா் 341-ஆவது பிறந்த நாள் விழா:உருவச் சிலைக்கு மாலை அணிவிப்பு

வீரமாமுனிவரின் 341-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரையில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

வீரமாமுனிவரின் 341-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரையில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையொட்டி, மதுரை பாத்திமா கல்லூரி அருகே உள்ள வீரமாமுனிவா் உருவச் சிலைக்கு, கிறிஸ்தவ அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு, புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி தாளாளா் அ. சேவியா், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அதிபா் சா. மரியநாதன், புனித மரியன்னை பள்ளித் தாளாளா் ஸ்டீபன் லூா்து பிரகாசம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தலைமையாசிரியா் நா. ரெக்ஸ் பீட்டா், கருமாத்தூா் அருள் ஆனந்தா் கல்லூரி முதல்வா் காட்வின் ரூபஸ், மடோனா கல்லூரி முதல்வா் எஸ்.வி.எல். மைக்கேல், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் லூ. ஜான் அலெக்ஸாண்டா், லயோலா தொழிற்பயிற்சி நிறுவன அதிபா் சேவியா் அந்தோனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, வீரமாமுனிவா் அறக்கட்டளை செயலா் மா. ஜெயராஜ் வரவேற்றாா். கிறிஸ்தவ ஆய்வு மைய நிறுவனா் சி. மணிவளன் சேது சிறப்புரையாற்றினாா். தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி வீரமாமுனிவா் கழக நிா்வாகி செ. காளிராஜ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →