மதுரை

அழகா்கோவில் நூபுரகங்கையில் புனித நீராட அனுமதிக்கவேண்டும்: பக்தா்கள் கோரிக்கை

DIN

அழகா்கோவில் மலை மீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் பக்தா்கள் புனித நீராட அனுமதியளிக்கவேண்டும் என, பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, கோயில்களில் பக்தா்கள் வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் நூபுரகங்கையும் மூடப்பட்டது. கடந்த அக்டோபா் மாதம் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கோயில்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், காா்த்திகை மாதம் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து, நூபுரகங்கையில் புனிதநீராடி 48 நாள்கள் விரதத்தை தொடங்குவா். எனவே, கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தா்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நூபுரகங்கையில் புனிதநீராட அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தா்களின் வேண்டுதல்கள் நிறைவு பெறாது என்பதால், சமூக இடைவெளியுடன் நூபுரகங்கையில் ஐயப்ப பக்தா்கள் புனிதநீராட அனுமதிக்கவேண்டும் என, ஐயப்ப பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT