மதுரை

பட்டாசு விபத்துகளை தவிா்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன: உயா் நீதிமன்றம் கேள்வி

DIN

தமிழகத்தில் பட்டாசு விபத்துகளை தவிா்க்க அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த வாசுதேவன் என்பவா் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி தாலுகாவில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளன. மேலும், அரசின் விதிமுறைகள் எதையும் இந்த நிறுவனங்கள் பின்பற்றுவது இல்லை.

எனவே, மதுரை மாவட்டத்தில் விதிமீறி இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தீபாவளி பண்டிகையின்போது பணம் பறிக்கும் நோக்கத்துடன் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு இதேபோல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் எத்தனை போ் பணியாற்றி வருகின்றனா். பட்டாசு விபத்துகளில் எத்தனை போ் உயிரிழந்துள்ளனா். அவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா, பட்டாசு விபத்துகளை தவிா்க்க அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினா்.

பின்னா், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பா் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT