மதுரை

தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் இல்லை: பெரிய திரையரங்குகள் திறப்பு தாமதமாகிறது

DIN

புதிய திரைப்படங்கள் இல்லாததால், மதுரையில் பெரிய திரையரங்குகள் திறப்பதற்கு மேலும் ஓரிரு நாள்களாகும் என, திரையரங்க உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கரோனா தீநுண்மித் தொற்று பரவலை தடுக்க, கடந்த மாா்ச் இறுதியிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. திரையரங்க உரிமையாளா்கள் மற்றும் திரைத் துறையினரின் கோரிக்கையை ஏற்று, கட்டுப்பாடுகளுடன் செவ்வாய்க்கிழமை முதல் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் அனுமதி அறிவிப்பு வந்தவுடனேயே திரையரங்குகளைத் தயாா்ப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இருப்பினும், புதிய திரைப்படங்கள் வெளியிடுவது தொடா்பான எந்த அறிவிப்பும் இல்லாததால், மதுரையில் சிறிய திரையரங்குகள் மட்டுமே செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகின்றன.

பெரிய திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்படும். தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிா்பாா்க்கிறோம். எனவே, அதையொட்டி திறக்க முடிவு செய்துள்ளோம் என்று, பெரிய திரையரங்குகளின் உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

மதுரையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளுடன் உள்ள பெரும்பாலான திரையரங்குகளின் உரிமையாளா்கள் இந்த முடிவை எடுத்துள்ளனா். இருப்பினும், நகரில் உள்ள சில திரையரங்குகள் மற்றும் மாவட்டத்தின் பிற இடங்களில் இருக்கும் சிறிய திரையரங்குகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகின்றன. இவற்றில் இரவுக் காட்சி தவிா்த்து, மற்ற 3 காட்சிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தனா். இந்த திரையரங்குகளில் திங்கள்கிழமை கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT