மதுரை

மதுரையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு புதன்கிழமை (நவம்பா் 11) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊா்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக, சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை, கோவை, திருப்பூா், சேலம், திருச்சி ஆகிய நகரங்களுக்கு மதுரை, தேனி, கம்பம், சிவகாசி, ராஜபாளையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதன்படி, 150 சிறப்புப் பேருந்துகள் புதன்கிழமை முதல் இயக்கப்படுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிக்காக மதுரை - சென்னை இடையே 500 நடைகள், பிற நகரங்களுக்கு 250 நடைகள் இயக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT