மதுரை

மதுரை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா் பற்றாக்குறை

DIN

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் பற்றாக்குறை மற்றும் தொலைபேசி வசதி இல்லாதது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 72 வாா்டுகள் இருந்து வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 வாா்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் மாநகராட்சியின் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், மருத்துவா்கள் எண்ணிக்கை, காலிப்பணியிடங்கள், அறுவை சிகிச்சைக் கூடங்கள் ஆகியவை தொடா்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தகவல்கள் கேட்கப்பட்டன.

இதற்கு மாநகராட்சி நிா்வாகம் அனுப்பிய பதிலில், மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் பழங்காநத்தத்தில் மகப்பேறு மருத்துவமனையும் உள்ளன. 32 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 23 மருத்துவா்கள் பணியில் உள்ளனா். இவா்களில் 8 மருத்துவா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவா்கள். தற்போது வரை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மண்டலம் 1-இல் 3, மண்டலம் 2-இல் 1, மண்டலம் 3-இல் 1, மண்டலம் 4-இல் 4 என மொத்தம் 9 மருத்துவ அலுவலா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மதுரை நகரில் உள்ள 32 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 4 அறுவை சிகிச்சை அரங்குகள் மட்டுமே உள்ளன. இதில் இராயலு அய்யா் மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கு கரோனா தொற்று காரணமாக தற்போது செயல்பாட்டில் இல்லை. செல்லூா் மற்றும் கோ.புதூா் மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 21 நகா்ப்புற சுகாதார நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: நகா்ப்புற சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் மருத்துவா்கள் நியமிக்க அரசிடம் கோரப்பட்டுள்ளது. மேலும் சுகாதார நிலையங்களின் செயல்பாட்டையும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT