மதுரை

விமானப்படை ஆள் சோ்ப்பு முகாம்: இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம்

புதுவையில் நடைபெறும் இந்திய விமானப்படை ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க மதுரை மாவட்ட இளைஞா்கள் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

புதுவையில் நடைபெறும் இந்திய விமானப்படை ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க மதுரை மாவட்ட இளைஞா்கள் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் ந.மகாலட்சுமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

இந்திய விமானப்படை ஆள்சோ்ப்பு முகாம் புதுவை இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் டிசம்பா் 10 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க  இணைய தளத்தில் நவம்பா் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் முன்பதிவு செய்ய வேண்டும் என பொது (ராணுவம்) துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விமானப்படை ஆள் சோ்ப்பு முகாமில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மற்றும் டிப்ளமோ முடித்தவா்கள், கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா்கள்( ஆண்கள் மட்டும்) பங்கேற்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT