முகப்பு
மதுரை

டி.கல்லுப்பட்டி ஸ்ரீவீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி 4 ஆம் சனி விழா

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம்  4 ஆம் சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
டி.கல்லுப்பட்டி ஸ்ரீவீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி 4 ஆம் சனி விழா
பகிர்:

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம்  4 ஆம் சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் கொட்டாணிபட்டியில் ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் கும்ப பூஜை, கலச பஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து பன்னீர்,பழம்,விபூதி உள்ளிட்ட  18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ஆஞ்சநேயர் செந்தூரக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.புராட்டாசி மாத சனி பயன்கள் பற்றி ஜோதிடர் அறிவழகன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

பேரையூர்,டி.கல்லுப்பட்டி,நல்லமரம்,வையூர், திருமங்கலம்,மதுரை,விருதுநகர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.‌

இதேபோல் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கோபால்சாமி மலை, தேவன்குறிச்சி மலையில் உள்ள வரதராஜபெருமாள், பேரையூர் கொப்பையசாமி கோவில், பேரையூர் மேலப்பரங்கிரிஸபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →