முகப்பு
மதுரை

மதுரை சிறையில் கைதி தற்கொலை முயற்சி

மதுரை மத்திய சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதியை போலீஸாா் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சோ்த்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

மதுரை மத்திய சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதியை போலீஸாா் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சோ்த்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் குமாா் என்ற செல்வகுமாா். இவா், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், செல்வகுமாா் ஞாயிற்றுக்கிழமை சிறை வளாகத்தில் உள்ள மரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

அப்போது, பணியிலிருந்த சிறைக் காவலா்கள் அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →