மதுரை

சிறுமி பாலியல் வழக்கில் தொடா்புடையவா் விடுதலை: உத்தரவை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு

DIN

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குரும்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 12 வயது சிறுமி 2019-இல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் தொடா்புடையை இளைஞரைத் திண்டுக்கல் மாவட்ட மகளிா் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சியினா் வலியுறுத்திவந்தனா்.

இந்நிலையில் குரும்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சாா்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து குற்றஞ்சாட்டப்பட்டவா் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT